சனி, 8 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் படத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு?

                 

                பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிகின்றனர் .அதில் சில தவறான விமர்சங்களும் உண்டு அவ்வாறு தவறாக விமர்சிப்பவர்களுக்கு இந்த பதிவு.


               வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல் பல மேதாவிகள் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயன்று அதில்  தோல்வியும் கண்டுள்ளனர். MGR , கலைஞர் , கமல்ஹாசன் உட்பட பலபேர் அடக்கம்.



             படம் தவறு என கூறும்  வசகர்களுக்கு பொன்னியின் செல்வன் என்பது முற்றிலுமான உண்மை நிகழ்வு அல்ல என்பது விளங்க வில்லையா. அது கதை மட்டுமே ஏனெனில் அதில் சித்தரிக்கபட்ட காதபத்திரம் அடக்கம்.                     

                    ராமாயணத்தையும் பலரும் சரியாக எடுக்கவில்லைதான் அதற்கென்ன பிறகு பல இராமயணங்கள் தோன்றின அல்லவா.அதே போல் இனி பல பொன்னியின் செல்வன் தோன்ற பல வைப்புகள் உண்டு என ஆறுதல் கொள்ளுங்கள்.

                

              முடிந்தவன் போராட முடியாதவன் இடையிலே வந்து முட்டுவது  போல உள்ளது உங்களின் விமர்சனம் . தமிழின் வரலாறு இப்போதுதான் சற்று துளிர் விட ஆரம்பித்திருகிறது ஒரு தமிழனாக அதனை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே புத்தக ஆர்வலருக்கு மதிப்பு கூட்டும்.


                தவறாக விமர்சிப்பவர்கள் முடிந்தால் இதைவிட வேண்டாம் குறைந்தது இந்த அளவிற்காவது ஒரு படத்தை எடுத்து காட்ட இயலுமா.படமாக வேண்டாம் ஒரு Cartoon-ஆக youtube வலையதளத்தில் முடியாதவர் குறைகூறி என்ன பலன்                    

                                                        வணக்கம்.முடிந்தால் பகிருங்கள்

Share:

தஞ்சை பெரிய கோவில் பற்றிய வதந்ததிகள் ?

 



கோபுரத்தின் நிழல் தரையில் விழாதா:

                        நிச்சயமாக கோபுரத்தின் நிழல் தரையில் விழும் நேரில் சென்று கண்டவர்கள் அனைவரும் கூறுவர்.அதுமட்டுமின்றி மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையில் கோபுரத்தின் நிழல் தரையை தழுவும் என உறுதிபடுத்த முடிகிறது.


ஒற்றைக்கல் கோபுரமா:

                        இல்லை தஞ்சை பெரியகோவில் ஒற்றைகல் கோபுரம் அல்ல கோபுரத்தின் உச்சியில் அமர்த்தபட்டிருக்கும் இறுதி] அமைப்பின் மீது சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளது . அவ்விடம் சேதமடைந்த போது பலகணமான கற்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பு கட்டபட்டுள்ளது என உறுதிபடுத்த இயன்றது. கோவில் நிர்வாகம் இந்த உண்மையை மறைத்திருப்பது அம்பலமானது. 


முகப்பில் இருக்கும் நந்தியின் சிலை:

                        அச்சிலை சோழ மன்னர்களால் கட்டபட்டது அல்ல.அச்சிலை நாயக்கர்காலத்தில் கட்டப்பட்டது . சோழர் கால சாஸ்திரத்தின் படி சூரிய ஒளியானது காலை தெய்வத்தை தழுவ வேண்டும் ஆகையால் சோழன் நந்தி சிலையை அக்கோவிலிலேயே மறைத்தான்


நந்தி என்ற சொல் தவறானது :

                            நந்தி என்ற சொல் வாடநாட்டு சொல்.தமிழ் சொல்என்னவென அறிய வேண்டுமனில் இணையதளத்தில் தேடி பார்க்கவும்  இல்லையெனில் COMMENT-ல் கேட்கவும் 

Share:

திங்கள், 3 அக்டோபர், 2022

இனி நீங்கள் இறந்த பின்புதான் உங்களுக்கு PF பணம் கிடைக்கும்?

     

   டல் நிலை சரியில்லாதகாரணத்தினால் illness க்காக விண்ணபித்தேன் 15 நாட்கள் ஆயினும் பணம் வரவில்லை நான் இறந்த  பின்புதான் இந்த பணம் எனது வங்கி கணக்கில் வரும் போலவே.

                        பலமுறை இது போலவே நடந்துள்ளது என்னதான் காரணம் நமக்கு ஆபத்தில் உதவாத பணம் இருந்தென்ன பயன். மோடியின் பைத்திய காரத்தணத்தால் மக்கள் எவ்வளவு அவதிக்கு உள்ளகின்றனர்.

            அரசாங்கம் மக்களிடையே இவ்வாறு பிச்சை எடுப்பது எதற்க்காக உழைத்த பணம் வயிற்றிக்கு வராமல் அடுத்தார் வயிற்றிக்கு போவது போல் உள்ளது.    

              இந்த pf பணத்திற்கு அதரவு தெரிவித்த நிதிபதிகளை எதால் அடிக்க வேண்டும். எனது பணம் என்னிடத்தில் இல்லை வருமா வருமா என்று வாயை பிளந்து பார்க்க வேண்டியுள்ளது .

               இந்த நிலையானது மக்களிடையே வறுமையை மேலும் அதிகபடுத்தியுள்ளது. pf அலுவலகத்தில் பணிபுரிபவருக்கு நம்மை பற்றிய நம் நிலைமையை பற்றிய கவலை இல்லை.

                நாம் இங்கு இறந்தாலும் அவர்களுக்கு தெரிய போவதில்லை அவர்களுக்கு தோன்றும்போது தான் பணத்தை அனுப்புவர் . அதுவரை தத்தாவானாலும் படுக்கையிலேயே அவ்வாறே இழுத்து கொண்டு கிடக்க வேண்டியதுதான் அவ்வாறே உயிர் போனாலும் போக வேண்டியதுதான்.

                நல்ல வாயன் சம்பாதித்ததை நார வாயன் திங்க வேண்டுமென இருந்தால் யார் என்ன செய்ய இயலும்.

                பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடுங்கி தின்னானம் அனுமாரு எனும் கதையாக நமக்கே நிறுவனத்தின் லாபத்தில் 0.003 சதவிதம் மட்டுமே சம்பளமாக வரும் அதை அதிகபடுத்துகிறோம் என  அதிலும் கைவைத்து பாதியை குறைத்து சுரண்டி திங்கும் அரசாங்கம்.

                இந்நிலை எப்போது மாறும் தெரியவில்லை 

                

Share:

அப்படி என்ன நீ பெரிய விவசாயி__👹👹👹

                எப்படி விவசாயிகள் என பீத்திக்கொள்ளலாம்.   அப்படி என்ன செய்தீர்கள் விவசாயிகள்

  • நான் உண்ணும் உணவு  விஷமானது    
  • நான் குடிக்கும் பால்  விஷமானது 
  • எனது பூமி  சிதைந்தது
  • நாளை இம்மண்ணில் வாழ முடியுமா தெரிவில்லை


            விசாயிகள் அனைவரும் என்று அயல் நாடு வியாபரத்திற்கு சோம்பு தூக்க ஆரம்பித்தார்களோ  அன்றே மதிப்பைஇழந்து விட்டனர். தங்கள் லாபத்திற்காக அயல்நாட்டு பொருட்களை வாங்கி அவர்களுக்கு லாபத்தை தேடித்தந்து நம் நாட்டை  நாசம் செய்து உள்ளனர் 

                நம் நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததில் அயல் நாட்டு வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது அதுமட்டுமின்றி விவசாயிகளின் பெரிய சுயநல லாபகணக்கும் ஒளிந்துள்ளது

                அயல் நாட்டு மருந்துகள் நிலத்தடியில் உள்ள மண் புழுக்களை முதலில் அழிக்கும் . யாரவது மருந்து தெள்ளித்த தோட்டத்தில் மண்புழுவை எடுத்து கட்ட முடியுமா .மண்புழு உள்ளவரை மருந்துக்களை விற்க முடியாது என செய்த சதி இது.அதுமட்டுமின்றி மருந்தின் வாடைக்கு   சிறு பூச்சிகள் மட்டுமின்றி எதுவுமே செடிகளை நெருங்காது. அந்த செடி விஷத்தன்மயுடன்தான் வளரும் இருந்தாலும் நம்மை அவை ஒன்றும் செய்து விடாது நினைக்க வேண்டாம் அக்காலம் தொட்டு இக்காலம் அம்மருந்துகளின் விளைவு பரம்பரை நோய்களை உண்டக்கியிள்ளது அது மட்டுமின்றிஉணவு ஆரோக்யமாக இல்லாததால் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்துள்ளான்😈👹👹👹👹👹👿👿👿

               கம்மங்கூல் கேழ்வரகு உண்ட நம் முன்னோர்கள் இன்றும் உடல் நலத்துடன் இருப்பார். ஆனால் நமது உயிர் நோய்களால் அவதி பட்டு வருகின்றது.

         நாட்டு மாடுகளை விட்டு அயல் நாட்டு பயன்படுத்த தொடங்கையில் அதற்க்கு ஆயிரம் செலவு ஏன் நம் மருத்துவர்களால் நம் நாட்டுமாடுகளின் வாழ்வாதாரத்தை காப்பற்ற இயலாதா அப்படி இயலவில்லை என்றால் அப்படி என்ன மருத்துவம் படித்தார் அவர் இதற்க்கு நம் நாட்டு வைத்தியனே மேல்.
                    
                    20 Liter பால் கொடுக்கும் கூடவே கொடிய நோயான Cancer எனும் வியாதியையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்முள் விதைக்கும்.சரிவர சத்து இருக்காது.

                       நெல் எடுத்துகொண்டால் எத்தனை பேர் மருந்து பயன்படுத்தாமல் வெள்ளாமை செய்கிறீர்கள். நீங்கள் எலிகளை விரட்ட தெளிக்கும் மருந்தும் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் சக்கரை வியாதியால்.

                    நீர்: செயற்கை முறையை பயன்படுத்தி தேவைக்கு அதிகமான நீரை எடுத்து அவிட்டத்தில் நீர் மட்டம் குறைத்தாய். யார் வாழ

                 உங்களில் சில சாதி வெறியர்கள் வேறு அடுத்து உங்கள் மகன் உங்கள் கலாச்சாரத்தை காப்பான விவசாயியாக இருப்பனா விவசாயம் காப்பான.. பிறகு எதற்கு கோமணத்தில் சாதி வேண்டிகிடக்கிறது

             விவசாயிகள் யாரும் விவசாயி என மார் தட்டி கொள்ள வேண்டாம் பதிலாக  கொலைகாரர்கள் என மார்தட்டிகொள்ளுங்கள்.எதிர்த்து என்னை விமர்சிப்பதற்கு பதிலாக விவசாயத்தை அழிவின் விளிம்பில் இருந்து மீடேடுங்கள். உங்களின் கலாச்சாரம் உங்களின் கடமை.உங்களின் பேர குழந்தைகள் உணமாய் நோயுடன் பிறப்பதை தவிர்க்க செய்யுங்கள். 
                                    
                                    செழிக்கட்டும் உங்கள் கலாச்சாரம் 

                                                               நன்றி    
                                                                                                                      -இலங்கை வேந்தன்

Share:

குரங்காக மாறப்போகிறாய் ! 😁 😁 😁 😁

                                                 

            எதிர்காலத்தில் சாதிக்க பலரும் பல நாடுகளும் பல முயற்சிகள் செய்து வரும் வேளையில் அப்படியே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்த்தால் இந்தியாவின் நிலையானது மிகவும் பரிதாபமாக உள்ளது    

            70%க்கும் அதிகமான இளையர்களை கொண்ட இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என தெரியவில்லை         

            இந்த இளைஞர்களை இந்தியா பயன்படுத்த தவரிகொண்டிருக்கிறது . பல இளைஞர்கள் இன்று வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இதே சமயம்  இந்திய இளையர்களின் ஆற்றலை வெளிநாடுகள் தங்களின் வளர்சிக்காக பயன்படுத்திகொண்டுள்ளது.

                    பல இந்திய இளைஞயர்களின் அறிவாற்றளானது வறுமையின் காரணமாக சிதைக்க படுகிறது. பலரும் குறைந்த ஊதியத்திற்கு அதிக ஆற்றலை செலவிடுகின்றனர். உடல் சோர்வு , காயங்கள் மற்றும் மன வலிகளை கட்டுபடுத்த போதை பொருட்களை உபயோகிக்கின்றனர்.பல நிறுவனகள் தானாக முன் வந்து போதை பொருட்களை தொழிலாளிகளுக்கு அழிகின்றான.    இவ்விடத்தில் இருந்து தொடங்குகிறது போதை பொருள் புழக்கம்.        

                        இப்போது இருக்கும் டிஜிட்டல் இந்தியாவில் போதை பொருட்களும் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு பெறபடுகிறது . மாத்திரைகள் வடிவில் சர்வ சாதாரணமாக இந்த போதை பொருட்கள் பெறபடுகின்றான. மேலும் பல கடைளில் சுலபமாக பீடி புகையிலை போல் வாங்க இயல்கிறது.

எவ்வாறு:

                இப்போது Online மூலமாகவே மருத்துவரை அணுகலாம் Online லேயே மருந்துகளை order செய்து வாங்கலாம். மருந்துவர் அளிப்பதுதான் மருந்து அந்த மருந்துகளில் அதிக டோஸ் கொண்ட மருந்துகள் போதை பொருட்களாக மக்களை வந்து அடைந்துவிட்டன. சிலவை மருந்துகளை நேரடியாக போதை பொருட்களாகவே தரப்படுகிறது. அது மட்டுமின்றி வியாபார நோக்கத்தின் காரணமாக உணவுகளிலும் போதை பொருட்கள் கலந்து தரபடுகின்றன மேலும் சில தரமற்ற உணவுகளும் விற்க்கபடுகின்றன. அவைகளால் என்ன என அனைவரும் கேட்கலாம். தரமற்ற உணவுகள் நம் உடலை வலுவிழக்க செய்து போதை மற்றும் மருந்துகளின் தாக்கத்தை அதிகபடுத்துகிறது.

              அவ்வளவுதான்  அனைவரும் போதை பொருட்களை உட்கொள்கிறோம் . இச்செயல்கள் உங்களின் சிந்தனை திறனை முற்றிலுமாக மங்க செய்து கொண்டுவருகிறது. ஆகையாலே நம்மை காட்டிலும் இன்றும் நம் முன்னோர்கள் அறிவு மிகுந்தவர்களாக  உள்ளனர். இந்நிலை இவ்வாறே தொடர்ந்தால் விரைவில் அணைத்து மனிதர்களும் குரங்காக மாறிவிடும்.

                அதுவும் நன்மைக்கே அப்பொழுதாவது இந்த பூமி சீர்குலையாமல் மறு நிலையை வந்தடையும். இந்தியாவின் இந்நிலையில் இருந்து தப்பி வாழ்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல

                                                            

பதிவி விரும்பினால் பகிரவும் நன்றி.

                    

Share:

சனி, 1 அக்டோபர், 2022

MGR- ன் PS1 பொன்னியின் செல்வன்


                                       

                பொன்னியின் செல்வன் நாவலை பலரும் கதையாக எடுக்க MGR காலத்திலிருந்தே பலரும் முயற்சிசெய்தனர் எனினும் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. மணிரத்தினம் இந்த படத்தை எடுத்தது அணைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
                    
                     இதனை தொடர்ந்து சினிமா கல்லூரியில் பணிபுரிந்து வரும் கல்லூரி மாணவர் சிவமுகில் D.FTECH (PS1) பொன்னியின் செல்வன் படத்தினை MGR மற்றும் ஜெயலலிதா அவர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.

            மேலும் ஜெயலலிதா குந்தவையாகவும் MGR வந்தியதேவனாகவும் இந்த படத்தில் அறிமுகம் செய்யபடுகின்றன.

                      மறைந்த கதா பாத்திரங்களை வைத்தே இந்த கதை உருவாக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

                                    

                       பொன்னியின் செல்வன் படத்தினை MGR அவர்கள் எடுக்க அவரின் கால கட்டத்திலே பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இயலவில்லை இன்று mgr மற்றும் ஜெயலலிதா அவர்கள் இணைந்தபடி இப்படம் அமைவது கட்சி தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.மேலும் இந்தப்படம் 3D ANIMATION மற்றும் 4K முறையில் உருவாக்கபடுவது தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
                                                                    

                          

Share:

பெரியார் மாவட்டம் எங்கு உள்ளது?

       

      இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் பெரியார் மாவட்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை

அறிந்துகொள்ளுங்கள்: 

              தற்போதுள்ள ஈரோடு மாவட்டமே பெரியார் மாவட்டமாகும்.

                            பெரியார் பிறந்து வளர்ந்து பல சாதனைகளை புரிந்த இடம் அதலால் அவரின் கொள்கைகளை நினைவு கூறும் வகையில் அவரின் பெயர் பெற்றது.

                    பிறகு பெரியாரின் கொள்கைகள் சிலர் ஆதிக்கம் செலுத்த தடையாக இருந்ததால் பெயர் மாற்றம் பெற்றது. காரணம் பெரியாரின் கொள்கைகள் ஆதிக்கத்தை வன்மையாக எதிர்த்தது 

Share:

சினிமா துறையின் கேவலம்(விபச்சாரம்)

     

ம்மில் பெரும்பாலும் சினிமா படங்களை விரும்புவோம் ரசிப்போம் 

                சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவோம் ஆனால் வைப்பு கிடைக்காமல் தவிப்போம் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அறியமாட்டோம்

                சினிமாவிற்கு முன்பக்கம் பார்க்க பொழுதுபோக்காக இருந்ததாலும் அதன் பின் பக்கம் மிக கொடூரமானது

                பல கள்ள நோட்டுக்கள் புழங்கும் இடம் . பல விபச்சார செயல்கள் நடைபெறும் இடம் அதுவும் புது முக பெண்களின் நிலையோ பரிதாபம்

                நடிகையாக வளம் வர விரும்பும் பலரை சினிமா துறையினர் விபச்சாரத்திர்க்கு உள்ளாக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

ஆதாரம் இல்லாமல் பதிவிடவில்லை                   

                                நடிகை சகீலா மற்றும்  ஸ்ரீ ரெட்டி போன்றோர் பேட்டிகளில் இன்றும் தெளிவாக இந்த அவலத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஈற்படுடுத்தும் வகையில் பேசி வருகின்றனர் . 

                                    தற்போது இருக்கும் சினிமா கொள்கைகளின் படி ஒரு பெண் கதா நாயகி ஆவதற்கு முன் விபச்சாரி ஆக வேண்டும்.இது ஒரு நடைமுறையாகவே உள்ளது

Share:

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நீங்கள் PHOTOSHOP பயன்படுத்துகிறீர்களா ? அப்படியானால் அவசியம் இவைகள் உங்களுக்கு தேவைப்படும்.

 

                    போடோஷப் வேலைகளுக்கு தேவையான அனைத்தும் இவ்விடத்தில்

பெறலாம் 



photoshop-ல் இரண்டு வகை உள்ளது
                            adobe photoshop cs
                            adobe photoshop cc

adobe photoshop cs
                        
                    இது பெரும்பாலும் பயன்படும் மென்பொருள்

adobe photoshop cc
                    
                    இதில் கலர் மற்றும் ஒட்டுமொத்த படத்தின் வண்ண பரிமாணத்தை மாற்ற இயலும்

                        photoshop-ல் வேலை செய்யும்போது PNG வகையிலான படங்கள் உங்களுக்கு அதிகம் தேவைப்படும் 
                    

           
                                

Share:

எப்படி பேய் பிடிக்கிறது? சுடுகாட்டில் அப்படி என்னதான் உள்ளது ?

          இந்த பதிவானது சுடுகாட்டிற்கு சென்று வருவோரின் சராசரி நிலையை உணர்த்துகிறது.

                   

                      



            பொதுவாகவே சிறியோர் முதல் பெரியோர் வரை சுடுகாட்டிற்கு சென்று வரும்போது அப்படி என்னதான் நடக்கிறது.

                இறந்தவரின் ஆன்மா சுடுகாட்டில் இருக்கும் என்பார்கள் அது எப்படி.அது அப்படி  அல்ல இறப்புக்கு பின் அம்மனிதனின் ஆறா எனப்படும் துகள்கள் சுடுக்காட்டை சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ஆறாவனது அதற்க்கு சமந்தப்பட்ட துகள்களை எளிதில் ஈர்க்க கூடியவை அதனாலேயே இறந்தவரின் பொருட்களை அவிட்டத்திலேயே விட்டு செல்கின்றன .. 

                அவ்வாறு இறந்தவரின் பொருட்களை வீட்டில் வைத்திருக்கும்போது அந்த வீட்டில் இருந்து சுடுகாட்டு வழியாக செல்லும்போது அந்த ஆறா ஒன்றை ஒன்று ஈர்க்கப்பட்டு வலுவானதாக மாறிவிடும் பின் அந்த ஆறா இறந்தவரின் நியாபக அலைகளை சுடுகாட்டை கடந்து சென்ற அம்மனிதருக்குள் அதிகமாக தூண்டிவிடும் ஆகவே அனைவரும் குளிப்பது கட்டாயம் .. சடங்கின்போது இந்த நடைமுறை..

                சடங்கிற்கு பின் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அந்த ஆறாவனது அழியும் தருணத்தில்  சுடுகாட்டில் அகண்டு விரிவடையும் அந்த தருணத்தில் வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்திருப்பின் அந்த ஆறாவனது வீட்டில் தங்கும் . பின் வீட்டில் உள்ளோரின் உடலில் ஒட்டிக்கொள்ளும் இறந்தவரின் நியாபகங்களை அவருக்குள் தூண்ட அவர் அந்த எண்ணங்களில் உளற பிறகு பேய்பிடித்து விட்டது என்பர்.. அதலால் குளிக்கும் போது முறையாக குளிக்க வேண்டும்.

                சில ஆறாக்கள் உடலின் வலிமை மற்றும் இரத்த ஓட்டத்தின் காரணமாக விரைவில் அழியாமல் சுடுகாட்டில் தங்கி கொண்டிருக்கும் மிகவும் வலுவானதாக இருக்கும் அவ்வகை ஆறாக்களுக்கு ஈர்க்கப்பட பயம் அல்லது பதட்டத்தின் காரணமாக உடலில் சுரக்கும் வியர்வை அல்லது எண்ணெய் துளிகள் போதும் உயிருள்ள மனிதனின் உடலால் ஈர்க்க பட்டுவிடும் 

                     சிலரின் உடலில் இயற்கையாவே  எண்ணெய் பதன் இருக்கும் . உதாரணத்திர்க்கு மூக்கை நன்றாக அழுத்தினால் எண்ணெய் பதன் கைகளில் தென்படும் இவ்வகையான உடலில் ஆறா எளிதாக தங்கும்.

                சுடுகட்டிருக்கு அருகில் என்ன பண்டங்களை எடுத்து செல்லும்போது அது ஆறாவினால் அதிகமாக ஈர்க்கபடும். அதுவே ஆன்மா உடலில் உடுருவுவதர்க்கான முதல் படி.  பின் அதிக நேரம் குளிக்காவிடில்  உடலில் பரவும் ஆறா காது மற்ற துவாரங்கள் வழியாக தங்கிவிடும் குளித்தாலும் போகாமல் குளித்த பின் மற்ற இடங்களுக்கு மெல்லமெல்ல பரவும்

             இதுபோல் மாற்றங்கள் நடந்த பின்னர் என்ன செய்வது என்பது பற்றி அறிய comment box-ல் இந்த பதிவு பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள் 

எனது அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்

                 அறியாதோர் அறிந்து கொள்ளுங்கள் அறிந்து கொண்டோர் அனைவருக்கும் பகிருங்கள் 



_______________________(SHARE TO ALL)_____________________________SUPPORT US



Share:

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 10 விதிகள்

 



1.அச்சம்

        கடனை விரைவாக செலுத்த வேண்டும் எனும் அச்சம் மனதில் இருக்க கூடாது. அதுவே பல இடங்களில் கடன் பெறுவதற்க்கு வழி வகுத்துவிடும்,பின்பு கடனாளி பட்டத்தை சுமக்க வேண்டியிருக்கும்

2.ஒரு கடனை செலுத்த மற்றொரு கடன் வாங்க கூடாது

        அவ்வாறு வாங்கினால் இறுதியாக வாங்கிய கடனை மட்டுமே முதலில் செலுத்த வேண்டும்.அப்போதுதான் அவரிடமே கடன் பெற்று பழைய கண்டனை எளிதாக செலுத்த இயலும்.

        குறிப்பாக நினைவில் கொள்க அவ்வாறு கடன் பெறும்போது முந்தைய கடனை புதியகடன் 7% வட்டியை அதிகரிக்கும் ..

3.அதிகவட்டிக்கும் பணம் பெற கூடாது

          5% க்கும் அதிகமான வட்டிக்கு கடன் பெற கூடாது.. அவ்வாறு பெரும்போது பழைய கடன் சுமைஅதிகரிக்க கூடும் .

4.கடன் வாங்கிய பணத்தில் உணவு உன்ன கூடாது

            கடன் வாங்கியது உணவுக்காக என இருக்க கூடாது.. எது எப்படி ஆனாலும் கடன் பெற்ற பணத்தில் உண்ண வேண்டாம்.பலரது கடன் வாழ்க்கை இதிலிருந்தே ஆரம்பிக்கும்.

5.கடனிருக்கும் போது வங்கி பரிவர்த்தனை பயன்படுத்த கூடாது 

        அதாவது வங்கியில் சேமிக்க கூடாது பதிலாக வீட்டிலேயே சேமிக்க வேண்டும் . வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது சில வங்கியால் சில நஷ்டங்கள் ஏற்பட கூடும் 

6.அதிக வட்டிகடனை முதலில் செலுத்த வேண்டும்

                5% க்கும் மேலாக உள்ள வட்டி கடன்களை முதலில் செலுத்த வேண்டும். அந்த வட்டி பணத்தை மீத படுத்தி உங்கள் வாழ்வாதார செலவுகளை முடிக்க இயலும். எதிர் காலத்தில் உங்களின் கடன் வாழ்க்கைக்கு முதல் முடிவாகவும் லாபத்தின் தொடக்கமாகவும் இந்த பணம் அமையும்

7.கடனை செலுத்தி முடித்தவுடன் அதே இடத்தில் (அவரிடத்திலேயே)கடன் வாங்க கூடாது

        கடன் பெற்ற இடத்திலே விரைவாக கடன் பெற கூடாது சிறிது இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தது 1௦ மாதங்களுக்கு பின்னர் கடன் பெறலாம்.அதுவே சிறந்த வழிமுறை.

8.அதிகமான ஒய்வு இருக்க கூடாது

        உணவுக்கு இல்லாவிட்டாலும் கடனை செலுத்தும் அளவிற்காவது உங்களின் வருமானத்தை அமைத்து கொள்ள வேண்டும்

9.சிறு கடன்கள்

        ஒரு பெரிய கடை செலுத்த அந்த பெரிய கடன் மட்டுமே உள்ளது எனும் பட்சத்தில் சிறு கடன்கள் பெறகூடாது ஏனெனில் ஒவ்வொரு கடனுக்கும் வட்டிவிகிதம் மாறிவிடும்.. ஒருவருக்கு பதிலலித்த நீங்கள் பலருக்கு பதிலளிக்க நேரிடும் பலரும் பலவிதமாக பேசுவர்

        ஆனால் சிறு கடன்களை செலுத்த சிருக்க்டங்கள் மட்டுமே உள்ளது எனும் பட்சத்தில் பெரிய கடன் பெறலாம் ஆனால் அந்த பெரிய கடன் பூர்த்தியாகும் வரை வேறு எந்த கடும் பெற கூடாது

10.உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை குறைத்து கொள்ளவும் 

         உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை கடன் காலத்தில் மட்டும் சற்று குறைத்து கொள்ளவும் 


கடனில்லா வாழ்வு அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

உங்களின் உறவுகளுக்கு பகிருங்கள்  (Share To All)  பயன்படட்டும்

                                                                                                            உங்கள்-அதியர் மகான்

Share:

சனி, 10 செப்டம்பர், 2022

பாலைவனத்திலும் பசுமை காணலாம் ? விவசாயிகளுக்கு மட்டும் இந்த பதிவு

     பெரும்பாலும் இப்போது இருக்கும் விவசாயிகள் தோட்டம் மற்றும் வேளாண்மையை ஒரு கலையா எடுத்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

             


           விவசாயத்தை ஒரு கலையாக எடுத்து கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட விவசாயிகள் இன்று பெருத்த லாபத்தை ஈட்டிகொண்டே செல்கின்றனர்  . அதன் பின்னணியில் உள்ள காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

                பொதுவாகவே ஒரு சிறந்த விவசாயி தன் தோட்டத்தில் ஈரப்பதத்தை எப்போதுமே தக்க வைத்து கொள்வார். அதாவது தோட்டத்தின் மூலைகளில் அதிகமான செடிகளை புதர் போல வளர்த்துவைத்திருப்பர்.கரணம் அந்த ஈரத்தன்மை தோட்டத்தில் இருந்து கொண்டே இருக்கவேண்டும் அனால் செயற்கையான உரங்கள் மண்ணை விரைவில் வற்ற செய்து விடும் ஆகையால் அவர் செயற்கை உரத்தை பயன்படுத்த மாட்டார்.

            வறண்ட பகுதியில் வளரும் தாவரங்கள் தோட்டத்தில் அதுவாகவே வளருமேயானால் அது விளைச்சல் சரிவர அமையப்போவதில்லை என்பதை குறிக்கும்

ஈரப்பதத்தின் காரணமாகவே நிலையான மகசூலை பெறமுடியும். 

                        செயற்கையான மாடுகளை வளர்க்கமட்டார் ஏனெனில்  நாட்டுமாடுகள் சந்தையில் முதலிடம் வகிக்க தொடங்கிவிட்டன.அதலால் மற்ற மாடுகள் வளைப்பதை நிருத்திவிட்டு நாட்டு மாடுகள் வாங்க தொடங்கிருப்பர். அது மட்டுமின்றி பல விவசாயிகள் அறியாத ஒன்று நாட்டு மாட்டு சனத்தை காட்டிலும் ஒரு நல்ல உர ஊக்கமூட்டி இதுவரை கண்டுபிடிக்க படவில்லை

            சாம்பலை கட்டிலும் நல்ல பூச்சி கொல்லி  கண்டு பிடிக்க படவில்லை .. வெளிநட்டவர் அவரின் மருந்துகளை இங்கு விற்றுவிட்டு . அவரின் நாட்டில் இயற்கையான முறையில் விவசாயம் செய்கின்றனர்.  



பாம்பு பல்லிகளுக்கு பயந்து விவசாயிகள் இன்று வெளிநாட்டு மருந்துகளை நாடி சென்று நல்ல உணவுகளை விளைவிக்க தவறிவிட்டோம் .

                நல்ல தரமான உடலுக்கு தீங்கு தராத உணவுகளை விளைவிப்பதே ஒரு விவசாயியின் கடமை. எப்படி விளைவித்தாலும் பெரிய லாபம் இல்லை எனில் ஏன் நல்ல உணவுகளை விளைவிக்க கூடாது


வெளிநாட்டவரிடம் ஏன் நீங்கள் செய்யக்கை உரம் பயன்படுத்த வில்லை என கேட்டபோது அவர் கூறிய பதில் .. இயற்கை உரத்தில் அதிக செலவுகளை கட்டுபடுத்த முடிகிறது . செயற்கை உரத்தை பயன்படுத்தும் போது அவ்வாறு கட்டுபடுத்த இயலவில்லை.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்

                                                                        நன்றி


Share:

இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு

அனைவருக்கும் இந்த பதிவுகளை பகிர்ந்து தமிழையும் எங்கள் இந்த பக்கதிண் பதிவுகளையும் ஊக்கபடுத்துங்கள் நன்றி.
Blogger இயக்குவது.

பொன்னியின் செல்வன் படத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு?

                                         பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிகின்றனர் .அதில் சில தவறான விமர்சங்க...