1.அச்சம்
கடனை விரைவாக செலுத்த வேண்டும் எனும் அச்சம் மனதில் இருக்க கூடாது. அதுவே பல இடங்களில் கடன் பெறுவதற்க்கு வழி வகுத்துவிடும்,பின்பு கடனாளி பட்டத்தை சுமக்க வேண்டியிருக்கும்
2.ஒரு கடனை செலுத்த மற்றொரு கடன் வாங்க கூடாது
அவ்வாறு வாங்கினால் இறுதியாக வாங்கிய கடனை மட்டுமே முதலில் செலுத்த வேண்டும்.அப்போதுதான் அவரிடமே கடன் பெற்று பழைய கண்டனை எளிதாக செலுத்த இயலும்.
குறிப்பாக நினைவில் கொள்க அவ்வாறு கடன் பெறும்போது முந்தைய கடனை புதியகடன் 7% வட்டியை அதிகரிக்கும் ..
3.அதிகவட்டிக்கும் பணம் பெற கூடாது
5% க்கும் அதிகமான வட்டிக்கு கடன் பெற கூடாது.. அவ்வாறு பெரும்போது பழைய கடன் சுமைஅதிகரிக்க கூடும் .
4.கடன் வாங்கிய பணத்தில் உணவு உன்ன கூடாது
கடன் வாங்கியது உணவுக்காக என இருக்க கூடாது.. எது எப்படி ஆனாலும் கடன் பெற்ற பணத்தில் உண்ண வேண்டாம்.பலரது கடன் வாழ்க்கை இதிலிருந்தே ஆரம்பிக்கும்.
5.கடனிருக்கும் போது வங்கி பரிவர்த்தனை பயன்படுத்த கூடாது
அதாவது வங்கியில் சேமிக்க கூடாது பதிலாக வீட்டிலேயே சேமிக்க வேண்டும் . வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது சில வங்கியால் சில நஷ்டங்கள் ஏற்பட கூடும்
6.அதிக வட்டிகடனை முதலில் செலுத்த வேண்டும்
5% க்கும் மேலாக உள்ள வட்டி கடன்களை முதலில் செலுத்த வேண்டும். அந்த வட்டி பணத்தை மீத படுத்தி உங்கள் வாழ்வாதார செலவுகளை முடிக்க இயலும். எதிர் காலத்தில் உங்களின் கடன் வாழ்க்கைக்கு முதல் முடிவாகவும் லாபத்தின் தொடக்கமாகவும் இந்த பணம் அமையும்
7.கடனை செலுத்தி முடித்தவுடன் அதே இடத்தில் (அவரிடத்திலேயே)கடன் வாங்க கூடாது
கடன் பெற்ற இடத்திலே விரைவாக கடன் பெற கூடாது சிறிது இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தது 1௦ மாதங்களுக்கு பின்னர் கடன் பெறலாம்.அதுவே சிறந்த வழிமுறை.
8.அதிகமான ஒய்வு இருக்க கூடாது
உணவுக்கு இல்லாவிட்டாலும் கடனை செலுத்தும் அளவிற்காவது உங்களின் வருமானத்தை அமைத்து கொள்ள வேண்டும்
9.சிறு கடன்கள்
ஒரு பெரிய கடை செலுத்த அந்த பெரிய கடன் மட்டுமே உள்ளது எனும் பட்சத்தில் சிறு கடன்கள் பெறகூடாது ஏனெனில் ஒவ்வொரு கடனுக்கும் வட்டிவிகிதம் மாறிவிடும்.. ஒருவருக்கு பதிலலித்த நீங்கள் பலருக்கு பதிலளிக்க நேரிடும் பலரும் பலவிதமாக பேசுவர்
ஆனால் சிறு கடன்களை செலுத்த சிருக்க்டங்கள் மட்டுமே உள்ளது எனும் பட்சத்தில் பெரிய கடன் பெறலாம் ஆனால் அந்த பெரிய கடன் பூர்த்தியாகும் வரை வேறு எந்த கடும் பெற கூடாது
10.உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை குறைத்து கொள்ளவும்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை கடன் காலத்தில் மட்டும் சற்று குறைத்து கொள்ளவும்
கடனில்லா வாழ்வு அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உங்களின் உறவுகளுக்கு பகிருங்கள் (Share To All) பயன்படட்டும்
உங்கள்-அதியர் மகான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக