சனி, 10 செப்டம்பர், 2022

பாலைவனத்திலும் பசுமை காணலாம் ? விவசாயிகளுக்கு மட்டும் இந்த பதிவு

     பெரும்பாலும் இப்போது இருக்கும் விவசாயிகள் தோட்டம் மற்றும் வேளாண்மையை ஒரு கலையா எடுத்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

             


           விவசாயத்தை ஒரு கலையாக எடுத்து கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட விவசாயிகள் இன்று பெருத்த லாபத்தை ஈட்டிகொண்டே செல்கின்றனர்  . அதன் பின்னணியில் உள்ள காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

                பொதுவாகவே ஒரு சிறந்த விவசாயி தன் தோட்டத்தில் ஈரப்பதத்தை எப்போதுமே தக்க வைத்து கொள்வார். அதாவது தோட்டத்தின் மூலைகளில் அதிகமான செடிகளை புதர் போல வளர்த்துவைத்திருப்பர்.கரணம் அந்த ஈரத்தன்மை தோட்டத்தில் இருந்து கொண்டே இருக்கவேண்டும் அனால் செயற்கையான உரங்கள் மண்ணை விரைவில் வற்ற செய்து விடும் ஆகையால் அவர் செயற்கை உரத்தை பயன்படுத்த மாட்டார்.

            வறண்ட பகுதியில் வளரும் தாவரங்கள் தோட்டத்தில் அதுவாகவே வளருமேயானால் அது விளைச்சல் சரிவர அமையப்போவதில்லை என்பதை குறிக்கும்

ஈரப்பதத்தின் காரணமாகவே நிலையான மகசூலை பெறமுடியும். 

                        செயற்கையான மாடுகளை வளர்க்கமட்டார் ஏனெனில்  நாட்டுமாடுகள் சந்தையில் முதலிடம் வகிக்க தொடங்கிவிட்டன.அதலால் மற்ற மாடுகள் வளைப்பதை நிருத்திவிட்டு நாட்டு மாடுகள் வாங்க தொடங்கிருப்பர். அது மட்டுமின்றி பல விவசாயிகள் அறியாத ஒன்று நாட்டு மாட்டு சனத்தை காட்டிலும் ஒரு நல்ல உர ஊக்கமூட்டி இதுவரை கண்டுபிடிக்க படவில்லை

            சாம்பலை கட்டிலும் நல்ல பூச்சி கொல்லி  கண்டு பிடிக்க படவில்லை .. வெளிநட்டவர் அவரின் மருந்துகளை இங்கு விற்றுவிட்டு . அவரின் நாட்டில் இயற்கையான முறையில் விவசாயம் செய்கின்றனர்.  



பாம்பு பல்லிகளுக்கு பயந்து விவசாயிகள் இன்று வெளிநாட்டு மருந்துகளை நாடி சென்று நல்ல உணவுகளை விளைவிக்க தவறிவிட்டோம் .

                நல்ல தரமான உடலுக்கு தீங்கு தராத உணவுகளை விளைவிப்பதே ஒரு விவசாயியின் கடமை. எப்படி விளைவித்தாலும் பெரிய லாபம் இல்லை எனில் ஏன் நல்ல உணவுகளை விளைவிக்க கூடாது


வெளிநாட்டவரிடம் ஏன் நீங்கள் செய்யக்கை உரம் பயன்படுத்த வில்லை என கேட்டபோது அவர் கூறிய பதில் .. இயற்கை உரத்தில் அதிக செலவுகளை கட்டுபடுத்த முடிகிறது . செயற்கை உரத்தை பயன்படுத்தும் போது அவ்வாறு கட்டுபடுத்த இயலவில்லை.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்

                                                                        நன்றி


Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு

அனைவருக்கும் இந்த பதிவுகளை பகிர்ந்து தமிழையும் எங்கள் இந்த பக்கதிண் பதிவுகளையும் ஊக்கபடுத்துங்கள் நன்றி.
Blogger இயக்குவது.

பொன்னியின் செல்வன் படத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு?

                                         பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிகின்றனர் .அதில் சில தவறான விமர்சங்க...