உடல் நிலை சரியில்லாதகாரணத்தினால் illness க்காக விண்ணபித்தேன் 15 நாட்கள் ஆயினும் பணம் வரவில்லை நான் இறந்த பின்புதான் இந்த பணம் எனது வங்கி கணக்கில் வரும் போலவே.
பலமுறை இது போலவே நடந்துள்ளது என்னதான் காரணம் நமக்கு ஆபத்தில் உதவாத பணம் இருந்தென்ன பயன். மோடியின் பைத்திய காரத்தணத்தால் மக்கள் எவ்வளவு அவதிக்கு உள்ளகின்றனர்.
அரசாங்கம் மக்களிடையே இவ்வாறு பிச்சை எடுப்பது எதற்க்காக உழைத்த பணம் வயிற்றிக்கு வராமல் அடுத்தார் வயிற்றிக்கு போவது போல் உள்ளது.
இந்த pf பணத்திற்கு அதரவு தெரிவித்த நிதிபதிகளை எதால் அடிக்க வேண்டும். எனது பணம் என்னிடத்தில் இல்லை வருமா வருமா என்று வாயை பிளந்து பார்க்க வேண்டியுள்ளது .
இந்த நிலையானது மக்களிடையே வறுமையை மேலும் அதிகபடுத்தியுள்ளது. pf அலுவலகத்தில் பணிபுரிபவருக்கு நம்மை பற்றிய நம் நிலைமையை பற்றிய கவலை இல்லை.
நாம் இங்கு இறந்தாலும் அவர்களுக்கு தெரிய போவதில்லை அவர்களுக்கு தோன்றும்போது தான் பணத்தை அனுப்புவர் . அதுவரை தத்தாவானாலும் படுக்கையிலேயே அவ்வாறே இழுத்து கொண்டு கிடக்க வேண்டியதுதான் அவ்வாறே உயிர் போனாலும் போக வேண்டியதுதான்.
நல்ல வாயன் சம்பாதித்ததை நார வாயன் திங்க வேண்டுமென இருந்தால் யார் என்ன செய்ய இயலும்.
பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடுங்கி தின்னானம் அனுமாரு எனும் கதையாக நமக்கே நிறுவனத்தின் லாபத்தில் 0.003 சதவிதம் மட்டுமே சம்பளமாக வரும் அதை அதிகபடுத்துகிறோம் என அதிலும் கைவைத்து பாதியை குறைத்து சுரண்டி திங்கும் அரசாங்கம்.
இந்நிலை எப்போது மாறும் தெரியவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக